ADDED : மே 14, 2008 07:37 PM

<P>ஒரு எறும்பு ஓரிடத்தில் சர்க்கரை இருப்பதை உணர்ந்தால் சுயநலமாக அப்படியே சாப்பிட்டு விடுவதில்லை. சர்க்கரை இருக்கும் இடத்திற்கு மேலும் பத்துபதினைந்து எறும்புகளை சேர்த்துக் கொண்டு வந்து உண்ண ஆரம்பிக்கும். எறும்பு போன்ற மிக சிறிய உயிர்களும் கூடத் தாராளமான மனதுடன் இருப்பதைப் பாருங்கள். நாம் எறும்பை விட உயர்ந்த பிறவி என்று எண்ணினால் மட்டும் போதாது. அதற்கான உயர்ந்த குணமுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.<BR>ஒரு மரக்கட்டையில் தீ வைத்தால், காடு முழுவதும் தீப்பற்றும் வரை அக்கட்டை எரியும். தீய இயல்புகளும் காட்டுத்தீ போன்றதே. தீயவர்கள் தம்மையும் அழித்துக் கொண்டு தம்மைச் சுற்றி இருப்பவரையும் அழித்து விடுவர். தங்கள் தீயகுணங்களை தன்னைச் சுற்றி பரவச் செய்து நண்பர்களையும் உறவினர்களையும் நாசமுறச் செய்கின்றனர்.<BR>ஆசை நம் பற்றுக்களை அதிகரிக்கச் செய்கிறது. அதனால், நம் நினைவாற்றலும், அறிவும் பலஹீனமாகி விடுகின்றன. அறிவு வலுவற்று போகும் போது மனிதத்தன்மையற்றுப் போகிறோம். <BR>சிறிது நேரம் பக்தி செய்துவிட்டு அதற்கு முழுநேர பலனை எதிர்பார்க்கிறோம்.மனதின் ஒரு பகுதியை கடவுளிடம் அளித்துவிட்டு அவரது முழுக்கருணையை வேண்டுகிறோம். இது பாதி வேலை செய்துவிட்டு முழுச்சம்பளம் கேட்பது போல் ஆகும். முழு மனதையும் அவருக்கு அர்ப்பணியுங்கள். நிச்சயம் கடவுளின் பூரண அருளுக்கு பாத்திரமாவீர்கள்.</P>