Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/அனுபவமே சிறந்த கல்வி

அனுபவமே சிறந்த கல்வி

அனுபவமே சிறந்த கல்வி

அனுபவமே சிறந்த கல்வி

ADDED : ஆக 30, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
* ஒற்றுமை என்பது உணர்வு மட்டுமல்ல. அதுவே மனித வாழ்வின் அடிப்படை. அன்பினால் மட்டுமே நம்முள் ஒற்றுமையைப் பலப்படுத்த முடியும்.

* ஆசைக்கு ஒரு உச்ச வரம்பை வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் மனம் அமைதியுடன் இருக்கும்.

* இயற்கை அளிக்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். இயற்கையை புறக்கணித்தால் மனித சமுதாயம் அழிவை நோக்கிச் சென்றுவிடும்.

* உரிமை என்பது கடமையில் அடங்கி இருக்கிறது. கடமை உணர்வோடு கூடிய உழைப்பு தான், உயர்வுக்கு வழிவகுக்கும்.

* புத்தக அறிவு மட்டும் பயன் தராது. எதையும் அனுபவத்தின் மூலம் சோதித்து உணருங்கள்.

* மக்கள் சேவையே மகேசன் சேவை. புகழுக்காக சேவை செய்யாதீர்கள். அன்புவழியில் இறைவனுக்காக சேவையாற்றுங்கள்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us