Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தேடி அலையாதீர்கள்

தேடி அலையாதீர்கள்

தேடி அலையாதீர்கள்

தேடி அலையாதீர்கள்

ADDED : ஜூலை 31, 2013 12:07 PM


Google News
Latest Tamil News
* தர்மநெறியைப் பின்பற்றினால் மனதில் அமைதி நிலைத்திருக்கும். ஆனால், சொல்லாலும், செயலாலும் சத்தியத்தை கடைபிடிப்பவனால் மட்டுமே தர்மநெறியை பின்பற்ற முடியும்.

* உலகில் எதுவும் நிலையானது அல்ல. கவுரவம், பணம், சொத்து, பதவி எல்லாம் நம்மை விட்டுச் சென்று விடும். அதனால், அவற்றின் மீது அதிக பற்று வைப்பது கூடாது.

* மனதிலிருந்து அகந்தையை தூக்கி எறியுங்கள். அன்புடன் எல்லா உயிர்களுக்கும் சேவை செய்யுங்கள். நாம் எல்லாரும் சமம் என்பதை உணருங்கள்.

* மனத்தூய்மை இல்லாமல் செய்யும் பஜனையும், பூஜையும் பலன் தருவதில்லை. கடவுளுக்கு ஆடம்பர பூஜை தேவையில்லை. அவர் முழுமையான அன்பை மட்டுமே நம்மிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

* கடவுளைத் தேடி எங்கும் அலையத் தேவையில்லை. அவர் நமக்குள்ளே எப்போதும் குடியிருக்கிறார்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us