Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கடமையில் கருத்தைச் செலுத்து

கடமையில் கருத்தைச் செலுத்து

கடமையில் கருத்தைச் செலுத்து

கடமையில் கருத்தைச் செலுத்து

ADDED : ஆக 27, 2009 10:07 AM

Google News
Latest Tamil News

* செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னபடியே நடந்து கொள்ளுங்கள். எல்லா மனிதர் களையும் நேசித்து சேவை செய்யுங்கள். ஆர்வத்தோடு சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

* எதையும் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தால் தான் பயனுடையதாகும். வெறும் புத்தக அறிவு மட்டும் போதாது. அது மேலோட்டமானதே. ஆழ்ந்த பயன் தரக்கூடிய அனுபவ அறிவு மனித வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

* இயற்கை அன்னைக்கு மதிப்பு கொடுங்கள். சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். இல்லாவிட்டால் அபாயம் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் காரணமாகி விடுவோம்.'

* தனித்து வாழாதீர்கள். ஒதுங்கிப் பழகாதீர்கள். மனம் விட்டுப்பழகக் கற்றுக் கொள்ளுங்கள். ஒற்றுமை உணர்வு உங்களைச் சுற்றி மலர விடுங்கள்.

* இறைவனின் திருப்புகழை மனதாரப் பாடுங்கள் அல்லது கேளுங்கள்.

* கடமைகளில் கருத்தைச் செலுத்துங்கள். அதுவே நம் பொறுப்பு. அதற்குரிய பலனைத் தரவேண்டியது கடவுளின் பொறுப்பு. உழைக்கும் பருவத்தில் உழைத்தால் பலன் தரும் பருவத்தில் இறைவன் அள்ளிக் கொடுப்பார்.
- சாய் பாபா

Our Apps Available On

Dinamalar

Follow us