Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உனக்கு தான் தேவை சுப்ரபாதம்

உனக்கு தான் தேவை சுப்ரபாதம்

உனக்கு தான் தேவை சுப்ரபாதம்

உனக்கு தான் தேவை சுப்ரபாதம்

ADDED : பிப் 12, 2011 11:02 PM


Google News
Latest Tamil News
* தெய்வத்தைக் காலையில் எழுப்புவதற்காக சுப்ரபாதம் பாடப்படுகிறது என்று கருதுவது தவறு, கடவுள் எப்போதும் விழித்துக் கொண்டு தான் இருக்கிறார். பக்தர்கள் தான் எழுப்பப்பட வேண்டும். அறியாமை என்ற தூக்கத்திலிருந்து உங்களை எழுப்பி,

ஒளியூட்டும் பணியில் ஈடுபடச் செய்வதே சுப்ரபாதம்.

* நல்ல எண்ணங்களை வளருங்கள், நல்ல வார்த்தை

களையே பேசுங்கள், நல்ல செயல்களில் ஈடுபடுங்கள், பிறருக்கு உதவுங்கள், எப்போதும் யாரையும்

புண்படுத்தாதீர்கள் அதுவே உண்மையான பக்தியாகும்.

* இயற்கை அளிக்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள். உங்கள் ஆசைக்கு ஓர் உச்சவரம்பை வைத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் இயற்கை

உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சியையும்,

முன்னேற்றத்தையும் தரும்.

* நம்மால் முடியும் என்று நம்பி நாம் வாதிடும் வரையில் கடவுளின் அருள் நமக்குக் கிடைப்பதில்லை. 'எல்லாம் நீங்கள் தான்! எனக்கு எதுவுமே இல்லை' என்று

ஒப்படைத்து சரணாகதி அடைந்துவிட்டால் கடவுள்

நிச்சயமாகக் காப்பாற்ற ஓடோடி வருவார்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us