Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பக்தியில் வேஷம் கூடாது

பக்தியில் வேஷம் கூடாது

பக்தியில் வேஷம் கூடாது

பக்தியில் வேஷம் கூடாது

ADDED : நவ 29, 2009 03:08 PM

Google News
Latest Tamil News

* வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மைப் பிறரிடம் ஒப்படைத்தால் தான் நம் பணிகளை நிம்மதியுடன் செய்யமுடியும். நமக்கு நோய் நீங்க மருத்துவரையும், நல்ல உடை வேண்டுமானால் தையக்காரரிடமும் போகிறோம். வாழ்க்கைத் தேவையைப் போல, வாழ்வின் அப்பாற்பட்ட தேவையான ஆன்மிகத்திற்கு ஆண்டவனை நாடுகிறோம்.
* இயற்கை தன்னுள் எத்தனையோ ரகசியங்களை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. புண்ணிய நதி தீரங்களிலும், புண்ணியத் தலங்களிலும் நீராடுவதும், கோயிலில் ஆண்டவன் தரிசனம் செய்வதும் நமக்கு பெருநன்மையைத் தருவதாகும்.
* ஆலயங்களில் இசை நிகழ்ச்சியைக் காட்டிலும் பஜனை கீதங்களை பாடுவது சிறப்பானது. இசையின் நுட்பத்தில் மனதைச் செலுத்தாமல் இறைவனை நினைத்து மனம் உருகிப் பாடுங்கள்.
* வெளிவேஷத்திற்காகப் பக்தி செலுத்துவதால் பயன் ஏதுமில்லை. பக்தி என்பது உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தில் உறுதியோடு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்துவிட்டால் நமது விருப்பங்கள் முழுமையாக நிறைவேறும்.
-சாய்பாபா

Our Apps Available On

Dinamalar

Follow us