Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

ADDED : மே 25, 2012 10:05 AM


Google News
Latest Tamil News
* நாக்கை அடக்கினால் நாம் ஞானியாக வாழலாம். அதனால் தான் விரதம் இருப்பதற்கும், நாள் முழுவதும் பேசாமல் மவுனம் காப்பதற்கும் பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.

* உண்ணும் உணவைப் பொறுத்தே ஒருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. வேண்டாத தீய ஆசைகளுக்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.

* நாக்கின் ருசி, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதை பொறுத்துத் தான் வாழ்வு சிறக்கும். நாக்கை நெறிப்படுத்தினால் பிற நன்மைகள் தாமாகவே நம்மை வந்தடையும்.

* இஷ்டதெய்வம் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அதன் நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரியுங்கள். அது நாவிற்கும், மனதிற்கும் இனிமை சேர்க்கும்.

* பேசுவதாக இருந்தால் அளவோடு பேசுங்கள். இனிமையாகவும், மற்றவர் மனம் புண்படாமலும் பேசப் பழகுங்கள். உங்களின் பேச்சு மற்றவருக்கு அமைதி தருவதாக அமையட்டும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us