Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்குரு/குழப்பமும் நல்லதற்கே!

குழப்பமும் நல்லதற்கே!

குழப்பமும் நல்லதற்கே!

குழப்பமும் நல்லதற்கே!

ADDED : ஜூன் 06, 2009 01:38 PM


Google News
Latest Tamil News
<P>* கற்றுக்கொள்ளுதல் என்பது இயற்கை யாகவே மனிதனிடம் இருக்கும் குணம். இது வரை தெரியாத ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது, அது உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படி இருக்கையில், கற்றுக் கொள்ளுதல் என்பது குழந்தைகளைத் துன்பத்தில் ஆழ்த்தினால், எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்!<BR>

<P>* ஒவ்வொரு சுற்றுப்புறமும் உங்களுக்கு எதிராக மாறும் வலிமை கொண்டதென நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமைதியான மகிழ்ச்சியான சுற்றுப்புறத்தை நீங்கள் உருவாக்கத் தவறி விட்டால், ஒவ்வொரு நட்பும், சுற்றமும், வீடும், நாடும், நகரமும் உங்களுக்கு எதிரான ஒரு போர்க்கள மாக மாறக்கூடிய சாத்தியம் இருக்கிறது.<BR>

<P>* எங்கே போதனைகள் இருக்கிறதோ, அங்கே வழிபடுதலும் வணங்குதலும் தான் இருக்கிறது. எங்கே வழிமுறைகள் இருக் கிறதோ, அங்கே தான் மாற்றங்கள் நிகழச் சாத்தியம் இருக்கிறது.<BR>

<P>* உங்கள் வாழ்வுச் சூழலில் குழப்பம் இருந்தால், அதை நல்லது எனச் சொல்வேன். குழப்பத்தின் அடிப்படை எதுவென அலசக் கிடைத்த அரிய வாய்ப்பு அது. உண்மையில் நீங்கள் யார் என்பதை விடுத்து வேறுவிதமாகக் கற்பனை செய்திருக்கும் அறியாமை தான் உங்கள் குழப்பத்தின் ஆணிவேர். ஆகவே, என்னிடம் அச்சம் கொண்டீர்கள் என்றால், அதை முழுமையாக, சாதகமாகப் பயன்படுத்தி, பிரச்னையின் மையத்துக்கு உங்களை அழைத்துச் செல்வேன்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us