Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/சொர்க்கமாக மாறிவிடும்

சொர்க்கமாக மாறிவிடும்

சொர்க்கமாக மாறிவிடும்

சொர்க்கமாக மாறிவிடும்

ADDED : மே 25, 2012 10:05 AM


Google News
Latest Tamil News
* நம்பிக்கையும் துணிச்சலும் கொண்டு உழைப்பில் ஈடுபடுங்கள்.

* கடவுளை முழுமையாக நம்பும் மக்கள் அதிகரித்தால் மட்டுமே உலகில் தர்மம் தழைத்தோங்கும். அப்போது பூவுலகமே

சொர்க்கமாக மாறிவிடும்.

* கடவுளின் தொடர்பை எப்போதும் கைவிடாதீர்கள். அவரால் உங்களுக்கு மிகப் பெரிய பெருமைகள் காத்திருக்கின்றன.

* காலத்தை வீணாக்கக் கூடாது. காலன் விரைந்து வருகிறான். அதற்குள் விரைந்து நல்லசெயல்களில் ஈடுபடுங்கள்.

* கள் குடித்தால் போதை உண்டாகும். ஆனால், புகழ் மொழிகளைக் கேட்டால் போதை வந்துவிடும். அதனால், புகழுக்காக ஒரு வேலையில் ஈடுபடாதீர்கள்.

* நல்வாழ்வு வாழவே மண்ணில்பிறந்திருக்கிறோம். அதற்காக தீவிரமான முயற்சியில் ஈடுபடுங்கள். சோம்பலைத் துரத்தியடித்து சுறுசுறுப்புடன் செயல்படுங்கள்.

* மனதில் சாந்தமும், தெளிவும் உண்டாக வேண்டும் என்றால் முதலில் நேர்மையும், உண்மையும் அவசியம்.

- சாந்தானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us