Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராதாகிருஷ்ணன்/இயந்திர வசதியைக் குறையுங்கள்

இயந்திர வசதியைக் குறையுங்கள்

இயந்திர வசதியைக் குறையுங்கள்

இயந்திர வசதியைக் குறையுங்கள்

ADDED : செப் 18, 2008 09:06 AM


Google News
Latest Tamil News
<P>உலகியல் வாழ்க்கையில் உடலுக்குரிய வசதிகளைத் தேடிக்கொண்டிருப்பவன் அவற் றை அடைவதிலேயே தன் ஆற்றல் முழுவதையும் செலவழிக்கிறான். அந்த அனுபவத்திலேயே தங்கி விடுகிறான். அவனால் ஆன்மிக முன் னேற்றம் பெற இயலாது. அதனால்தான், உணவு, உடை, ஓய்வு போன்ற சுகபோகங்களிலும் எளிமையைக் கடைபிடிக்க வேண்டுமென ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. தியாக உணர்வை வற்புறுத்துகின்றன. ஒரு மனிதனின் மனநிறைவு உடற்சுகத்தில் இல்லை. அது மனப்பக்குவத்தில் தான் இருக்கிறது என்பது வேதாந்தக் கோட்பாடு. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இயந்திரங்களால் ஏற்படும் வசதிகளைக் குறைத்துக் கொள்கிறோமோ, அந்தளவுக்கு மனம் பக்குவமடையும். தெய்வங்களுக்கு மிருகங்களைப் பலி கொடுப்பதால் ஒருபோதும் இறையருளைப் பெற முடியாது. இப்படிப்பட்டவர்களை இறைவன் ஒருநாளும் தன்னிடம் நெருங்க விடமாட்டான். நம்மிடம் உள்ள வசதிகளை தியாகம் செய்து, உடல் இன்பத்தை பலி கொடுப்பதன் மூலமே இறைவனின் பூரணமான அருளைப் பெற இயலும்.இதற்கான சூழ்நிலையைத் தேடித்தான் மகான்கள் காடுகள், மலைகள் என்று ஜனநடமாட்டம் இல்லாத இடங்களைத் தேடிச் செல்கிறார்கள் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களில் ஆஸ்ரமங்களை அமைத்து இறைசிந்தனையில் தம்மை அர்ப்பணிக்கிறார்கள். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us