Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/இனிமையாய் பேசுங்கள்

இனிமையாய் பேசுங்கள்

இனிமையாய் பேசுங்கள்

இனிமையாய் பேசுங்கள்

ADDED : ஆக 21, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
* ஒருவர் நேர்வழி பெற்ற பின், வீண் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டால் அவர் ஒரு போதும் வழி கெடமாட்டார், ஏனெனில், இறைவனிடம் மிகவும் கோபத்திற்குரியவர்கள், வீண் தர்க்கம் செய்வதில் திறமைசாலிகளாக இருப்பார்கள்.

* ஒரு முஸ்லிமிற்கு ஆடைகளை இனாமாக கொடுத்தால், எதுவரை அந்த ஆடை, பெற்றுக் கொண்டவரின் உடலில் இருக்குமோ, அக்காலம் வரை இறைவனின் பாதுகாவல், கொடுத்தவருக்கு இருந்து கொண்டே இருக்கும்.

* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்து உங்களிடம் உதவி கேட்டால் அவனை விரட்டாதீர்கள், கொஞ்சமேனும் கொடுத்து அனுப்புங்கள், அல்லது இனிய வார்த்தைகளால் பதில் சொல்லுங்கள்.

* எளிய ஆடை ஈமானுடைய அடையாளங்களில் ஒன்றாகும், எவன் புகழுக்காகவும், பகட்டுக்காகவும் ஆடை அணிகிறானோ அவனுக்கு கியாம நாளில் இழிவான ஆடையை அல்லாஹ் அணிவிக்கிறார்.

* யாராவது உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால், நீ அவனுடைய குறைகளை சொல்லி திட்டாதே!

- நபிகள் நாயகம்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us