Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/வாக்கைக் காப்பாற்றுங்கள்

வாக்கைக் காப்பாற்றுங்கள்

வாக்கைக் காப்பாற்றுங்கள்

வாக்கைக் காப்பாற்றுங்கள்

ADDED : செப் 11, 2012 09:09 AM


Google News
Latest Tamil News
* அநியாயமான வாதங்களுக்கு துணை இருப்பவர் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார்.

* தனது வயது அதிகரிக்க அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே உங்களில் சிறந்தவர்.

* நீ நல்லவன் என்று உன் பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீ நல்லவனே!

* தகுதியுள்ள திறமையுள்ள ஒருவர் இருக்க தகுதியற்ற ஒருவரை பதவியில் நியமிப்பவர் இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் துரோகம் செய்து விட்டார்.

* கொடுத்த வாக்குறுதியைப் பாதுகாக்காதவன் இஸ்லாத்தை புறக்கணித்தவனாவான்.

* ஆசைகளையும் தம் தேவைகளையும் குறைத்துக் கொண்டவர்களே சுதந்திரமானவர்கள்.

* உங்களுடைய பாவங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஆனால் உங்களுடைய கடன்கள் மன்னிக்கப்படுவதில்லை.

* எவர் தமது குடும்பத்தின் நன்மையை கருதிச் செலவு செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் தருமத்தின் நன்மையை அளிக்கிறான்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us