Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/போதுமென்ற மனம் வேண்டும்

போதுமென்ற மனம் வேண்டும்

போதுமென்ற மனம் வேண்டும்

போதுமென்ற மனம் வேண்டும்

ADDED : ஜன 25, 2011 07:01 PM


Google News
Latest Tamil News
* (இறைவனின் அடியார்கள்) இறைவனின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்) ''நாங்கள் இறைவனுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்த பிரதிபலனையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை''.

* இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்; அதுவே என்றும் அழியாத செல்வமாகும்.

* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.

* இறைவனின் (உண்மையான) அடியார்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால் 'உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்' என்று கூறிவிடுவார்கள்.

* அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை இறைவன் விரும்புவதில்லை. ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும் மறைவாகவும் நற்செயல்கள் செய்த வண்ணம் இருங்கள், அல்லது குறைந்த பட்சம் (அநீதியானவர்களின் தீங்கை) மன்னித்துவிடுங்கள்.

வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து







      Our Apps Available On




      Dinamalar

      Follow us