Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/உரிமைகளைப் பறிக்காதீர்!

உரிமைகளைப் பறிக்காதீர்!

உரிமைகளைப் பறிக்காதீர்!

உரிமைகளைப் பறிக்காதீர்!

ADDED : மார் 10, 2011 12:03 PM


Google News
Latest Tamil News
* என் இறைவனே! சிறு வயதில் எவ்வாறு என்னை என் பெற்றோர் கருணையுடனும், பாசத்துடனும்

வளர்த்தார்களோ அவ்வாறே அவர்கள் மீது கருணை புரிவாயாக!

* இறைக்கட்டளைகளை எடுத்துரைக்க மட்டுமே உரிமை உள்ளது. ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது, மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். சுதந்திரம் வழங்கப்பட்ட மனிதனையே இறைவன் மறுமையில் அவனது செயல்களுக்கு பொறுப்பாளியாக்கி விசாரணைக்கு உட்படுத்தி தீர்ப்பு வழங்க முடியும்.

* பெற்றோர் நலன் பேண வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம், அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (எனவே) உனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து.

* தனிமனிதனின் உரிமைகளை பறிக்கக் கூடாது, சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது, இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us