ADDED : மார் 29, 2010 09:33 AM

* உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம்பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா என்ன? பாருங்கள்! நீங்களே அதனை அருவருப்பாய் கருதுகின்றீர்கள்''.
* ''உன் சகோதரனைப் பற்றி அவன் வெறுக்கும் வகையில் (அவன் இல்லாதபோது) பேசுவதே புறமாகும்'' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். ''கூறப்படும் விஷயம் உண்மையிலேயே என் சகோதரனிடம் காணப் பட்டாலுமா அது புறம் ஆகும்?'' என நபி அவர்களிடம் வினவப்பட்டது. ''நீ கூறும் விஷயம் அவரிடம் காணப் பட்டால் நீ பேசியது புறமாகும். அது அவரிடம் இல்லையெனில் நீ பேசியது அவதூறாகும்'' என பதிலுரைத்தார்கள் நபி அவர்கள்.
* புறம் பேசுபவனை- அவன் எவரைப் பற்றி புறம் பேசினானோ, அவர் மன்னிக்காத வரை இறைவனும் மன்னிப்பதில்லை.
* கொடுமைக்குள்ளானவன் குரல் எழுப்புவது புறம் ஆகாது: அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை இறைவன் விரும்புவதில்லை. ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும், மறைவாகவும் நற்செயல்கள் செய்தவண்ணம் இருங்கள்; அல்லது குறைந்தபட்சம் (அநீதியானவர்களின் தீங்கை) மன்னித்து விடுங்கள்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)