Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/அறிவாளியாக இருங்கள்

அறிவாளியாக இருங்கள்

அறிவாளியாக இருங்கள்

அறிவாளியாக இருங்கள்

ADDED : மார் 11, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
* போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.

* மனத்தை அடக்கியாண்டு மறுமைக்கு பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி.

* மனம் போன போக்கில் நடந்து கொண்டு இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள்.

* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால், அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் அதன் முடிவு நல்லதாக இருந்தால் அதைச் செய்வீர்.

* சுகபோகம் தேடும் நோக்கத்துடன் மார்க்கத்தை பயன்படுத்தாதீர்கள். அது மார்க்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும்.

* திருக்குர்ஆனை சுமப்பவர்களுக்கும், அறிவுத்துறை பயிற்சியாளர்களுக்கும் எதிராக உமது நாவை பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் நரகத்தில் நாய்கள் உம்மைத் தாக்கக் கூடும்.

* பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us