Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/மலர் போல பேசு

மலர் போல பேசு

மலர் போல பேசு

மலர் போல பேசு

ADDED : ஜூலை 29, 2009 11:24 AM

Google News
Latest Tamil News

* தானங்கள் நான்கு வகையாகும். அவை உணவு, மருந்து, சாஸ்திரம், அபயம் என்பன. இந்த நான்கு தானங் களையும் நாம் முடிந்த அளவிற்கு செய்ய வேண்டும்.
*  உண்மையை மறந்து பொய்யின் பக்கம் சென்றுவிடுதல் பாவமாகும். உண்மை யை மட்டும் பேசி வாழ்தல் என்பது எப்போதும் கடினம் தான். இருந்தாலும் பிறருக்கு தீங்கிழைக்காத படி நாம் பேச வேண்டும்.
* மிதமிஞ்சி உணவை ருசிக்காகச் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். உடல் மட்டுமின்றி அதிக உணவால் மனமும் கெட்டுவிடும்.
*  பேராசை உடையவனுக்கு இந்த உலகம் முழுவதையும் வழங்கினாலும் திருப்தி உண்டாவதில்லை. வயதான நிலையிலும் ஆசை மனிதனை விடுவதில்லை.  இதனால் மரணம் நெருங்கும்போதும் அவன் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.
*  கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்ற வர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்?
*  நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.

Our Apps Available On

Dinamalar

Follow us