Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/மனஅமைதியை வேண்டுவோம்

மனஅமைதியை வேண்டுவோம்

மனஅமைதியை வேண்டுவோம்

மனஅமைதியை வேண்டுவோம்

ADDED : பிப் 01, 2011 08:02 PM


Google News
Latest Tamil News
* கடவுளிடம் முழுமையான சரணாகதி மனப்பான்மையுடன் வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் நம் குடும்ப

பொறுப்புகளையும் உணர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும்.

* உங்களது உள்ளம் கோயிலாக விளங்கட்டும். அங்கு அருளே வடிவான இறைவனைப் பிரதிஷ்டை செய்யுங்கள். நல்ல எண்ணங்களே அப்பெருமானுக்குரிய அர்ச்சனைக்குரிய மலர்கள்.

*நமக்கு அவசியம் மன அமைதியாகும். இதனை ஒருவர் பெறவேண்டுமானால் விருப்பு வெறுப்பற்ற சமநிலை பெற்றாக வேண்டும். அந்நிலையைப் பெறுவதற்காகவே நாம் நாளும் முயற்சிக்கவேண்டும்.

* எது மிக நல்லது என்று தோன்றுகிறதோ அதைத்தானே தாய் தனது குழந்தைக்குத் தருவாள். அதுபோலத் தான் கடவுளும் நமக்கு எது தகுதியோ அதைத் தான் தருகிறார் என்ற நம்பிக்கை நம் மனதில் எழவேண்டும்.

*கோடி ரூபாய் நஷ்டமானாலும் அதைத் திரும்பப் பெறலாம். ஒருவரால் மீண்டும் அதனைச் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால், நேரத்தை ஒருபோதும் வீணாக்கக் கூடாது. குறித்த நேரத்தில் குறித்த பணியைத் திட்டமிட்டுச் செய்து முடித்தல் வேண்டும்.

- மாதா அமிர்தானந்தமயி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us