Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/மானசீகமான பிரார்த்தனை

மானசீகமான பிரார்த்தனை

மானசீகமான பிரார்த்தனை

மானசீகமான பிரார்த்தனை

ADDED : செப் 17, 2009 02:39 PM

Google News
Latest Tamil News
உங்களுக்குப் பிடித்தமான கடவுள் படத்தின் முன் கொஞ்சநேரம் அமர்ந்திருங்கள். பின்னர் அந்த இறைவுருவத்தை மனதிற்குள்ளே தியானிக்கும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அந்த உருவம் மனதில் மறைந்தவுடன், மீண்டும் கண்ணைத் திறந்து இறைத்திருவுருவைச் சற்று பாருங்கள். படிப்படியாக, கடவுளின் உருவம் எப்போதும் நம் நினைவில் நிற்கத் தொடங்கும். நீங்களே கடவுளுடன் பேசுவது போலவும் கற்பனை செய்யலாம்.

'அம்மா! என்னைக் கைவிட்டு விடாதே. உன்னை அன்றி வேறு யார் எனக்குத் துணை!'' என்று மானசீகமாக பிரார்த்தனை செய்யுங்கள். அம்பிகையின் இரு திருவடிகளையும் பற்றிக் கொள்ளுங்கள். மனம் உருகி உங்கள் வேண்டுதலை வாய்விட்டுக் கூறுங்கள். இப்படி நாள்தோறும் தியானம் செய்து பழகப் பழக மனதில் எண்ண அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும். ஆனந்த ஊற்று மனதில் உற்பத்தியாகி, மகிழ்ச்சி மேலிடும். தண்ணீரில் உள்ள கசடுகளை வடிப்பான் தடுத்து நிறுத்துவதுபோல, மனதில் உள்ள மாசு எண்ணங்களை இப்பிரார்த்தனை வடிகட்டிவிடும். குழந்தைப் பருவத்திலிருந்தே இப்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது.
-மாதா அமிர்தானந்தமயி

Our Apps Available On

Dinamalar

Follow us