Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/பூந்தென்றலை அனுபவியுங்கள் * மரம் தன்னை கோடாரியால்

பூந்தென்றலை அனுபவியுங்கள் * மரம் தன்னை கோடாரியால்

பூந்தென்றலை அனுபவியுங்கள் * மரம் தன்னை கோடாரியால்

பூந்தென்றலை அனுபவியுங்கள் * மரம் தன்னை கோடாரியால்

ADDED : ஏப் 22, 2008 02:11 AM


Google News
Latest Tamil News
<P>வெட்டுபவனுக்கும் நிழல் தந்து உதவுகிறது. அது போல, நாமும் நம்மை துன்புறுத்துவோருக்கும் நன்மை செய்யும் அளவிற்கு நம் மனம் பக்குவப்படுமானால் நம்மால் உண்மையான ஆன்மிகவாதியாக இருக்க இயலும். ஆசை, அகங்காரம் போன்ற தீய குணங்கள் சுமைகளைப் போன்றவை. இச்சுமைகளை நீங்கள் விட்டுவிடுவீர்களானால் கடவுள் என்னும் கருணைத் தென்றல் உங்களை உயரே தூக்கிச் செல்வார். தீய குணங்களாகிய சுமைகளை விட்டு, பூந்தென்றல் காற்றைப்போல் விளங்கும் கடவுளை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.</P>

<P>உலகத்தில் நாம் பல விஷயங்களிலும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறோம். ஆசைப்பட்டவை கிடைத்தால் மகிழ்கிறோம். கிடைக்காவிட்டால் துன்பம் நம்மை ஆட்கொள்கிறது. இந்த ஆசைகளுக்கு முடிவும் இல்லை. ஆனால், ஆன்மிக வாழ்வில் இறைவனை அடைய வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை மட்டுமே உண்டு. மற்ற எந்த ஆசைக்கும் இறைவாழ்வில் இடம் இல்லை. நதியில் குளிக்கச் செல்பவர் குனிந்து மூழ்காவிட்டால் உடம்பு அழுக்காகவே இருக்கும். அதுபோல, பணிவுடையவர்களால் மட்டுமே தங்களை ஞானவாழ்க்கைக்கு தகுதிப்படுத்திக் கொள்ள முடியும். </P>

<P>&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; <STRONG>-மாதா அமிர்தானந்தமயி</STRONG></P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us