/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/தியானத்தை விட சிறந்தது எதுதியானத்தை விட சிறந்தது எது
ADDED : மே 26, 2009 07:30 PM

வேண்டாமே பரபரப்பு!
* ஏழைகளையும், இயலாமையால் வருந்துபவர்களையும் ஆணவத்தால் இழிவாக நடத்துபவன் மறுபிறப்பில் அதற்கான தண்டனையை அடைவான்.
* எல்லா உயிர்களும் ஈசனின் கோவில்களே. அதனால், எல்லா உயிர்களையும் மதிப்பது நம் கடமையாகும். இதுவே மேலான அறமாகும்.
*உணவருந்தும் போது வேண்டாத பரபரப்பும், வேகமும் கூடாது. அதே நேரத்தில் வேண்டாத கால தாமதமும் கூடாது.
* உயிர்களிடம் அளவு கடந்த கருணையோடு இருந்தால் அன்றி கடவுளின் பூரண அருளைப் பெற முடியாது.
* கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களையும் காப்பாற்றுவதே கடவுளின் எல்லையில்லாத கருணைக்கு அடையாளமாகும்.
* ஞானத்தைத் தருபவர் நல்லாசிரியரே. வாழ்வில் நல்ல வழிகாட்டியான ஞான ஆசிரியரைப் பெற்றுவிட்டால் நிச்சயம் பிறவிக்கடலைத் தாண்டி விடலாம்.
* கடவுள் வணக்கம் தேவையா? கடவுளை வணங்காமல் வாழமுடியாதா? என்றெல்லாம் சிந்திக்கிறோம். மானம் உள்ளவன் ஆடை உடுப்பான். ஆடையில்லாமல் வாழ முடியாதா என்ன! அதுபோல, மனம் உள்ளவன் கடவுளை வணங்குவான்.