Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/தாயினும் சிறந்தவர் கடவுள்

தாயினும் சிறந்தவர் கடவுள்

தாயினும் சிறந்தவர் கடவுள்

தாயினும் சிறந்தவர் கடவுள்

ADDED : மே 31, 2009 05:52 PM


Google News
Latest Tamil News
<P>* கண்ணால் பார்க்க முடியாது என்பதால் 'கடவுள் இல்லை' என்று சொல்லக்கூடாது. இந்த உடம்புக் குள்ளே உறைந்திருக்கும் உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? கண்ணால் காணமுடியாது என்பதால், நாம் உயிர் இல்லாதவர்கள் என்று கூறுவது சரியா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைந்திருக்கின்றனர்.<BR>* சின்னஞ்சிறு உதவியைச் சரியான நேரத்தில் செய்தவர்களையே நாம் நன்றியோடு நினைக்க வேண்டும். ஆனால், இறைவன் செய்தது சிறு உதவியா? இல்லை பேருதவியாகும். தாயினும் சாலப் பரிந்து நம் மீது அன்பு காட்டுபவன் இறைவன். பெற்ற தாய் இப்பிறவிக்கு உரியவள் ஆவாள். ஆனால், இறைவனோ என்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் நமக்கு தாயாக இருக்கிறான்.<BR>* கடவுள் அங்கு இங்கு என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி, பிரகாசமாய் அருளுடன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பாலில் உறையும் நெய் போல, இறைவன் இப்பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கிறார். இவ்வுலகத்தை மட்டுமே காணும் கண்களுக்கு கடவுள் தெரிவதில்லை. கடவுளை மட்டுமே காணும் கண்களுக்கு உலகம் புலப்படுவதில்லை. </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us