/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/முதலில் உன்னை ஆராய்ந்து பார்முதலில் உன்னை ஆராய்ந்து பார்
ADDED : நவ 15, 2009 01:35 PM

* கடவுளை நேராகப் பார்த்தவர்கள் இவ்வுலகில் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். ஒரு ஊருக்குப் போகாதவன், அந்த இடம் கிடையாது என்று சொல்ல முடியாது. கடவுள் என்பது அனுபவித்து உணர வேண்டிய அனுபவம்.
* பம்பரம் தானே ஆடுமா? அல்லது ஆட்டினால் ஆடுமா? பம்பரத்தைச் சாட்டை வைத்தே நாம் ஆட்டுகிறோம். ஆனால், இவ்வுலகமாகிய பம்பரத்தை சாட்டை இல்லாமலே ஆட்டுகிறான் இறைவன்.
* பானை செய்ய முதற்காரணம் மண்; அதை செய்ய காரணம் குயவன்; துணைக்காரணம் தண்டச்சக்கரம். அதுபோல உடலாகிய பானையை, சக்தியாகிய துணைக்காரணம் கொண்டு, பானை செய்ய காரணமாக இருக்கின்ற சிவபெருமான் மாயையைக் கொண்டு பானை செய்கிறார்.
* பானையைக் கண்டதும், அதைச் செய்த குயவனின் நினைவு வருவதைப்போல, உலகத்தைக் கண்டதும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் நினைவுக்கு வர வேண்டும்.

* அணுவை ஆராய்கிறான் மனிதன். வானமண்டலங்களை ஆராய்கிறான். சந்திரனை ஆராய்கிறான். ஆனால், தன்னை ஆராயவும் சிந்திக்கவும் மறுக்கிறான். நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நாம் பூமியில் பிறந்ததன் நோக்கம் என்ன என்று ஒவ்வொருவரும் சிந்தித்தால் கடவுளைப் பற்றி ஞானம் வந்துவிடும்.
-வாரியார்