Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்

உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்

உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்

உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்

ADDED : ஜூலை 21, 2010 08:07 PM


Google News
Latest Tamil News
* மன மாசு தியானத்தாலும், வாயினால் செய்த பாவங்கள் இறைவனைத் துதிப்பதாலும், உடம்பால் செய்த பாவங்கள் இறைவனை அர்ச்சிப்பதாலும் நீங்கும்.

* வளரும் பயிருக்கு முள்ளை வேலியாக இட்டால் ஆடுமாடு போன்ற உயிர்களால் துன்பம் நேராமல் வளர்ந்து நிற்கும். நாம் சம்பாதிக்கும் பணத்திற்கும் ஒரு வேலி இருக்கிறது. அது தான் தர்மம். தர்மம் செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

* தனக்கு வருகின்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குச் சிறிதும் துன்பம் செய்யாதிருப்பதும் மிக உயர்ந்த குணங்கள்.

* உலகில் மக்கள் செய்கின்ற பிழைகளில் எல்லாம் பெரிய பிழை எது தெரியுமா? அறிவு தரும் நல்ல பயனுள்ள நூல்களைப் படிக்காமல் இருப்பதாகும்.

* கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகத்திற்குச் சேவை செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.

* யாராவது நம்மைப் புகழும்போது மகிழ்ச்சி அடைதல் கூடாது. இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் சமமாகக் கருதினால் மனம் அமைதி பெறும்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us