Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/படிக்கல்லில் ஏறுங்கள்!

படிக்கல்லில் ஏறுங்கள்!

படிக்கல்லில் ஏறுங்கள்!

படிக்கல்லில் ஏறுங்கள்!

ADDED : ஜூன் 10, 2013 11:06 AM


Google News
Latest Tamil News
* கடவுள் எல்லா உயிரினங்களையும் படைத்திருக்கிறார். ஆனால், மனிதனுக்கு மட்டுமே மனம் என்னும் கருவியைக் கொடுத்திருக்கிறார். நன்றியுணர்வோடு கடவுள் மீது பக்தி செலுத்த வேண்டியது அவசியம்.

* தினமும் மாலையில் குடும்பத்துடன் அமர்ந்து கூட்டு வழிபாடு செய்வது நல்லது. இதனால், குடும்பத்தில் ஒற்றுமையும், தெய்வஅருளும் நிறைந்திருக்கும்.

* பசுவின் மடியில் இருந்து பால் சுரப்பது போல, கோயிலில் பக்தியுணர்வு சுரக்கிறது. அதனால் ஆலயவழிபாட்டை வாரம் ஒருமுறையாவது செய்யுங்கள்.

* இறைவன் நமக்கு தரும் சோதனைகளை படிக்கல்லாக மாற்றி முன்னேறுங்கள்.

* உணவு, உறக்கம், பொருளாசை என எப்போதும் சிந்திந்துக் கொண்டிருப்பவன் மனிதனாக மாட்டான். பண்புநெறி தவறாமல் அறவழியில் நடப்பவனே சிறந்த மனிதன்.

* மனிதனையும் விலங்கையும் பிரிக்கும் எல்லைக்கல்லாக பக்தி இருக்கிறது. பக்தி இல்லாத மனிதன் அறிவாளியாக இருந்தாலும் மனித தன்மை அற்றவனே.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us