/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பத்து நிமிஷமாவது வணங்குங்கள்பத்து நிமிஷமாவது வணங்குங்கள்
ADDED : அக் 11, 2010 07:10 PM

* கடவுள் நமக்கு உடல் கொடுத்ததோடு
மட்டுமல்லாமல் இப்பரந்த உலகம்,
தேவையான உணவு, உடை ஆகியவற்றையும் தந்திருக்கிறார். அதனால், நாள்தோறும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். இதன் அடையாளமாகச் சிலர் உண்பதற்கு முன் கடவுளுக்கு நிவேதனமாக உணவைக்
காட்டியபிறகு சாப்பிடத் துவங்குவர்.
* ஒவ்வொரு வீட்டிலும் மாலை நேரத்தில் விளக்கேற்றி, பத்து நிமிஷ நேரமாவது இஷ்ட தெய்வத்தின் மீது பஜனை செய்ய வேண்டும். வீட்டில் செய்யும் வழிபாடு நிலையான இன்பத்தை தரவல்லது.
* இறைவனிடம் எதை எதையோ வேண்டுகிறோம்.
உண்மையில் வேண்டுவதாக இருந்தால், மனம்
கண்டபடி அலையாமல், வைராக்கியத்தைக் கேட்டுப் பெறவேண்டும். அப்போது தான் மனம் திருந்தி
புத்தியின் வழியில் செல்லும்.
* நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் தப்பில்லை. ஆனால், எல்லா தெய்வங்களும் ஒன்றே என்று புரிந்து கொண்டு வழிபடவேண்டும் என்பது தான் மிகவும்
முக்கியம்.
காஞ்சிப்பெரியவர்