Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பல கடவுள்கள் ஏன்?

பல கடவுள்கள் ஏன்?

பல கடவுள்கள் ஏன்?

பல கடவுள்கள் ஏன்?

ADDED : டிச 21, 2007 10:26 PM


Google News
Latest Tamil News
எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை சாப்பிட்ட மாத்திரத்தில் வயிறு நிரம்பி விடுகிறது. ஆனால், அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்கிறது? வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி, ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து அவனவன் சாப்பிடுகிறான். அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள். ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன.

புராணம் என்றால் பழசு என்பதுதான் அர்த்தம். சுவாபமாக மிகவும் நல்லவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். சில பேரிடத்தில் கெட்ட அம்சம்தான் அதிகமாக இருக்கும். அப்படி ரொம்ப நல்லவர்களாக அல்லது ரொம்ப கெட்டவர்களாக இருக்கிறவர்களுடைய சரித்திரங்களைப் புராணங்களாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் புராணங்களைப் பார்த்தால் ஏராளமான நீதிகள் இருக்கும். அவற்றையெல்லாம் பார்ப்பது இல்லை? தத்துவங்களைப் பார்ப்பது இல்லை. அவற்றில் இரண்டுதலை, நான்குதலை, பசுமாடு பூஜித்தது என்றுவரும். இப்படி இருப்பவற்றைப் பார்த்து, ' இது என்ன? எல்லாம் கட்டுக்கதை' என்று சொல்லிவிடுகிறோம்.

ஒரு கையில் ஒடிந்த தந்தம் என்றால், இன்னொரு கையிலே கொழுக்கட்டை வைத்திருக்கிறார் விநாயகர். அதற்குள் தித்திப்பாக இருக்கிற வஸ்துவுக்குப் பெயர் பூர்ணம். பூர்ணம் என்றால் முழுமை. ஒரு கையில் இருக்கிற தந்தம் மூளி. இன்னொன்றிலோ முழுமை. வாழ்க்கையை முழுமையாக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us