Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/எந்த செயலுக்கு பலனுண்டு?

எந்த செயலுக்கு பலனுண்டு?

எந்த செயலுக்கு பலனுண்டு?

எந்த செயலுக்கு பலனுண்டு?

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
* மனம் இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறிவிடும் தன்மை கொண்டது.

* பிறருக்கு எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவதில் தான் பெருமை இருக்கிறது.

* மனிதன் எந்தநிலையில் இருந்தாலும் கடவுளின் அருட்குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

* பெரும்பாலும் கோபத்தினால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம். அதனால், கோபத்தை அறவே கைவிடுவது நல்லது.

* கடவுளை நினைத்துச் செய்யும் எந்த செயலுக்கும் பலனுண்டு. அறியாமல் செய்தாலும் கூட அதற்கும் பலன் கிடைத்துவிடும்.

* தர்மம், நீதி இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பில்லாதவன் மனிதநிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.

* எந்த விஷயத்தையும் அலட்சியத்துடன் அணுகக்கூடாது. அக்கறையுடன் செய்யும் செயல் தான் வெற்றி பெறும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us