Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/ஆசை தீரும் காலம் எப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

ஆசை தீரும் காலம் எப்பொழுது

ADDED : ஏப் 15, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
* வசதியாக இருப்பவர்களுக்கு கூட, மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த மனப்பான்மையால் போட்டி பொறாமை உருவாகிறது.

* உலகில் போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவோ, நிம்மதியோ உண்டாகாது. பணஆசை பெருகப் பெருக மக்களிடம் போட்டி உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும்.

* சின்ன வயதில் ஞானம், ஆன்மிகம் எல்லாம் எதற்கு என்று அலட்டிக் கொள்கிறார்கள். துன்பத்தை எல்லாம் விலைக்கு வாங்கி சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்று பணத்தைத் தேடி அலைகிறார்கள்.

* எல்லாருக்கும் எல்லா வசதியும் சமமாகக் கிடைத்தாலும் மனம் அடங்குவதில்லை. அப்போதும், முதலில் அது தனக்குத் தான் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறது.

* மன இருளை விரட்டும் பிரகாசத்தை பெறும் முயற்சியை ஒருபோதும் தளர விடக்கூடாது. கிழக்கில் தோன்றும் சூரியன் காணாமல் போனால் கூட பாதகமில்லை. நமக்குள் ஒளிதரும் ஞானத்தை ஒருபோதும் விட்டு விடக் கூடாது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us