Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/வலிமைக்கு என்ன வழி?

வலிமைக்கு என்ன வழி?

வலிமைக்கு என்ன வழி?

வலிமைக்கு என்ன வழி?

ADDED : ஏப் 30, 2013 11:04 AM


Google News
Latest Tamil News
* எங்கும் மின்ஆற்றல் நிறைந்திருந்தாலும், அதை வெளிப்படுத்த ஒரு நிலையம் ஏற்படுத்துவது போல, எங்கும் நிறைந்த அருளை பெற கோயிலை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

* கோயிலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் அனைவருக்கும் அக்கறை தேவை. தூய்மை என்பதில் மனம், உடல் இரண்டுமே அடங்கும்.

* நம்மிடம் இருக்கும் செல்வம் அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானதே. அதை வைத்துக் கொண்டு நாலுபேருக்கு உதவி செய்ய வேண்டும்.

* பதினைந்து நாளைக்கு ஒருமுறை விரதம் இருக்க வேண்டும். இதனால், உடலும், மனமும் வலிமை பெறும்.

* நியாயம் என்றால் முறை என்று பொருள். எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தவறும் போது துன்பம் தான் உண்டாகும்.

* நமக்கு நியாயமாகத் தோன்றுவதை செய்வது கூடாது. எல்லோருக்கும் பொதுவான நியாயத்தை பின்பற்றுவதே சரியான நெறிமுறை.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us