Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பெற்றவளுக்கு சமமானது எது

பெற்றவளுக்கு சமமானது எது

பெற்றவளுக்கு சமமானது எது

பெற்றவளுக்கு சமமானது எது

ADDED : மார் 08, 2012 03:03 PM


Google News
Latest Tamil News
* மாணவர்கள் தெய்வபக்தி, குரு பக்தி, பெற்றோர் பக்தியுடன் கல்வியில் கவனம் செலுத்தினால் பகவான் கற்பதற்கான ஞானத்தை அளிப்பார்.

* அன்பும், தர்மமும் நிறைந்த பகவானின் அருளை நினைத்து நன்றி செலுத்தினால் மனஅழுக்கு நீங்கி விடுகிறது. புண்ணியஸ்நானம் செய்த பலன் கிடைக்கிறது.

* அன்பும், சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கும் ஒரு பசுவைப் பார்த்தால், பெற்ற தாயைப் பார்ப்பது போன்ற உணர்ச்சி அனைவருக்கும் தோன்றும்.

* செல்வந்தராகவும், புத்திசாலியாகவும் இருந்தாலும் பகவானின் அருள் இருந்தால் தான் வாழ்க்கையில் சந்தோஷமும், சகல பாக்கியமும் கிடைக்கும்.

* பகவானின் பாத கமலங்களை விடாமல் பிடித்துக் கொண்டு, ''எனக்கு வேறு கதியில்லை; நீ தான் நல்ல வழி காட்ட வேண்டும்,'' என்று வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

* சமுதாயத்தில் நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பது கடினமாகத்தோன்றலாம். பகவானின் அருளைத் துணையாகக் கொண்டால் எளிதாக சாதிக்கலாம்.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us