Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/உதவும்போது ஏற்படும் எண்ணம்

உதவும்போது ஏற்படும் எண்ணம்

உதவும்போது ஏற்படும் எண்ணம்

உதவும்போது ஏற்படும் எண்ணம்

ADDED : ஏப் 01, 2008 03:03 AM

Google News
Latest Tamil News

ஜீவகாருண்யம் என்று குறிப்பிடுவதை கருணை என்று நீங்கள் அறிவீர்கள். கருணை காட்டுவது என்றால் உதவி செய்பவர் ஒரு படி மேலே போய் நிற்பது போலவும், உதவியைப் பெறுபவர் நம்மை விட தாழ்ந்த நிலையில் இருப்பது போலவும் நாம் எண்ணுகிறோம். ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு எளிமை, அடக்கம், அகங்கார நீக்கம் ஆகிய நல்ல விஷயங்கள் உண்டாக வேண்டும். மாறாக, நாம் பிறருக்கு உதவி செய்யும் போது 'போனால் போகிறது, நம்மிடம் வீணாக இருப்பது தானே, பிறருக்கு உபயோகமாக இருக்கட்டும்' என்ற எண்ணத்துடன் செய்வது நல்லதல்ல. இதனால் நமக்கு தீமையே உண்டாகும்.

ஒருவருக்கு உதவி செய்யும்போது கருணை, காருண்யம் என்று சொல்வதை விட அன்பு என்று சொல்லிவிட்டால் இந்த ஏற்றத்தாழ்வு இருக்காது. அன்பு இயல்பாகவே ஒருவனுக்கு உண்டாவதாகும். இதில் பிறருக்கு உதவி செய்கிறோம் என்ற சிந்தனைக்கு இடமில்லை. அன்புக்கு நம்மவர், மற்றவர் என்ற பேதமே கிடையாது. ஆரம்பத்தில் இத்தகைய அன்பு சாத்தியம் இல்லாதது போல தெரியும். இதை திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிடுகிறார். அன்பு, அருள் என்று இரு பதங்களைப் பிரித்து சொல்லியுள்ளார். அருள் என்பது அன்பின் குழந்தை என்று அவர் கூறுகிறார். இதிலிருந்து, அன்பின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

-காஞ்சிப்பெரியவர்

Our Apps Available On

Dinamalar

Follow us