Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/அன்பாகப் பேசுங்கள்!

அன்பாகப் பேசுங்கள்!

அன்பாகப் பேசுங்கள்!

அன்பாகப் பேசுங்கள்!

ADDED : பிப் 13, 2013 05:02 PM


Google News
Latest Tamil News
* மற்றவர்களிடம் நம் கஷ்டங்களைச் சொல்லாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படையாகச் சொல்லும்போது மனதில் நிம்மதி பிறக்கிறது.

* எல்லாம் அறிந்த அருட்சக்தியான கடவுளிடம் கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டால் மன சாந்தியும், பக்குவமும் உண்டாகும்.

* உடலாலும், மனதாலும் அவ்வப்போது பலவித பாவங்களை நாம் செய்கிறோம். பாவத்தைப் போக்க ஒரே வழி புண்ணிய செயல்களை செய்வது தான்.

* ஆசைகளை குறைத்துக் கொண்டே போனால் துன்பங்களும் படிப்படியாக குறைந்து விடும்.

* உடம்பால் மட்டுமல்லாமல் மனதாலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே அகிம்சை.

* நல்ல விஷயமாக இருந்தாலும் கடுமையாக சொன்னால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பிறர் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அன்பாகச் சொல்ல வேண்டும்.

* இயற்கையும் மாறுதலுக்கு உட்பட்டது. மலையும், கடலும் கூட காலப்போக்கில் மாறத்தான் போகின்றன.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us