Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நல்லவர் என பெயரெடுங்கள்

நல்லவர் என பெயரெடுங்கள்

நல்லவர் என பெயரெடுங்கள்

நல்லவர் என பெயரெடுங்கள்

ADDED : டிச 14, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
* அன்பினால் நாமும், நம்மைச் சுற்றியுள்ள எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம். அன்பே சிவமாக அமர்ந்திருக்க ஆசைப்படுவோம்.

* கோபப்படுவதால் எதிராளிக்கு கோபம் வளருமே ஒழிய, குறைய வாய்ப்பில்லை. அன்பாக இருப்பது தான் நம்முடைய சுபாவமான தர்மம். அதுதான் ஆனந்தம் தரவல்லது.

* கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்கிறோம். அது நல்வழியிலிருந்து நம்மை திசை திருப்பி, அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே கோபத்தை தவிர்ப்பது நல்லது.

* எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக இருப்பது தான் சிறப்புடையது. பார்த்த அளவிலேயே நல்ல மனிதர் என்று சொல்லும்படியாக நம் வாழ்க்கை இருக்க வேண்டும்.

* அடக்கம் தெய்வீக குணம். முதலில் தேவை வெளிஅடக்கம், வெளிஅடக்கமே மனதில் உள்அடக்கத்தை உண்டு பண்ணும்.

* மனிதன் எந்த நிலையில், எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனின் கல்யாண குணங்களைக் கேட்பதை தன் வாழ்நாளில் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us