Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பேச்சைக் குறைத்தால் போதும்

பேச்சைக் குறைத்தால் போதும்

பேச்சைக் குறைத்தால் போதும்

பேச்சைக் குறைத்தால் போதும்

ADDED : டிச 12, 2007 09:33 PM


Google News
Latest Tamil News
திங்கள், வியாழன், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மவுனம் அனுஷ்டிக்கலாம். சோமவாரம், குருவாரம் ஆபீஸ் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மவுனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.

நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும், வாக்குதேவியான சரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நட்சத்திரமான மூலத்தில் மவுனம் இருப்பதுண்டு. தினமும் அரைமணியாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.

தெய்வத்தின் கருணை நமக்கு தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அம்பாளுடைய அருள்தான். நல்லது காரணம் இல்லாத அருள். கஷ்டம் ஒரு காரணத்துக்காக ஏற்படுகிற அருள். நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் அவளுடைய அருள் என்று கொள்ள வேண்டும்.

நாம் எல்லோரும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும். சேதுவில் அணைக்கட்டும் ராமனுக்கு அணில் செய்த உதவிபோல,

மனிதனாகும் போது கடவுள் மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாவ புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்க வைக்கிறார். கஷ்டங்களைக் கண்ட இடத்தில் போய்ச் சொல்வதற்குப் பதிலாக பகவானிடம் சொல்லிக் கொள்ளலாம்.

ஜகன்மாதாவைத் தெரிந்து கொள்கிறவரைத்தான் துவேஷம், விரோதம், வெறுப்பு எல்லாம் இருக்கும். அவளைத் தெரிந்து கொண்டபின் இவை எல்லாம் மறைந்து எல்லோரும் சகோதரர்கள் என்ற அன்பு வந்துவிடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us