Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கடவுள் மகாசக்தி படைத்தவர்

கடவுள் மகாசக்தி படைத்தவர்

கடவுள் மகாசக்தி படைத்தவர்

கடவுள் மகாசக்தி படைத்தவர்

ADDED : ஜன 17, 2010 02:47 PM


Google News
Latest Tamil News
* ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். இன்ன இன்ஜினியர் இதைக்கட்டினார் என்று அறிகிறோம். ஒரு வண்டியைப் பார்த்தால் அதை உருவாக்கியவன் இன்னார் என்று கூறுகிறோம். தாமாக எப்பொருளும் உருவாவதில்லை. ஒழுங்குக்கு கட்டுப்பட்டு உருவாகி இருக்கும் எப்பொருளையும் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று உணர்கிறோம்.<br>* எத்தனையோ ஒழுங்குகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தை செய்வதற்கும் ஒருவன் இருக்கத்தானே வேண்டும்! பஞ்சபூதங்களை ஒன்று சேர்த்து உருவாக்கி அமைத்திருக்கும் இயற்கையை இயக்க ஒரு மகாசக்தியாகிய பேரறிவாற்றல் இருக்கவேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.<br>* அழகழகான வண்ணமலர்களுக்கு உருவம் கொடுத்த மலரச் செய்வது யார்? அத்தனை மலைகளையும் ஒரு கதியில் நிலைத்து இருக்கச் செய்தது யார்? நட்சத்திரங்களையும், கோள்களையும் ஒழுங்கான கதியில் சுழலச்செய்தது யார்? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கும் விடையாக இருப்பது ஒரே மகாசக்திதான் காரணம் என்பது நமக்குப் ரிகிறது. அந்த மகாசக்திக்கு, பேராற்றலுக்கு, பேரறிவிற்குப் பெயர் தான் கடவுள்.<br>-காஞ்சிப்பெரியவர்<br>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us