ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

* நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பது தான் உயர்ந்த குணம்.
* உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் அடிப்படைத் தேவைகள். இவை தவிர மற்றதெல்லாம் ஆடம்பரம் தான்.
* அன்னதானத்தால் மட்டுமே ஒருவனை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.
* பணத்தாலோ, உழைப்பாலோ, வாக்காலோ இந்த மூன்றில் நம்மால் எது முடியுமோ அதன் மூலம் பிறருக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம்.
* கடவுள் நல்ல புத்தியும் சக்தியும் நமக்கு கொடுத்து இருக்கிறார். அதைக் கொண்டு நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்வதே பிறவிப்பயன்.
* மனம் பாவச்செயலில் ஈடுபடாமல் தூய்மையுடன் இருக்க தியானம் வழிவகுக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து நாம் தியானம் பயில்வது அவசியம்.
* நேரமே கிடையாது என்று சாக்குபோக்கு சொல்வது கூடாது. மன உறுதி இருந்து விட்டால் அதிகாலையில் எழுந்து தியானம் செய்ய முயல்வீர்கள்.
- காஞ்சிப்பெரியவர்