Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பக்தியால் கட்டிப்போடுங்க!

பக்தியால் கட்டிப்போடுங்க!

பக்தியால் கட்டிப்போடுங்க!

பக்தியால் கட்டிப்போடுங்க!

ADDED : பிப் 28, 2013 11:02 AM


Google News
Latest Tamil News
* ஒருவருக்கு நியாயமாக இருப்பது மற்றொருவருக்கு நியாயமாகத் தோன்றுவதில்லை. இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான நியாயத்தைப் பின்பற்றுவதே நல்லது.

* நியாயம் என்றால் 'முறை'. எந்தச் செயலையும் அதற்குரிய முறையுடன் செய்ய வேண்டும்.

* மரத்திற்கு மரம் தாவும் குரங்குக்குட்டி போல, மனம் ஆசைவயப்பட்டு அலைகிறது. அதனை 'பக்தி' என்னும் கயிறால் கட்டிப் போடவேண்டும்.

* விருப்பு வெறுப்புடன் செய்யும் செயலால் பாவம் உண்டாகும். அகம்பாவம் இல்லாமல் செயல்பட்டால் பாவமோ, புண்ணியமோ சேர்வதில்லை.

* ஒழுக்கமுடன் வாழ்ந்தால் நாம் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் அழகும், பண்பும் வெளிப்படும்.

* விருப்பு வெறுப்பு கொள்ளாமல் உலக நன்மை கருதி செய்யும் செயல் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அது புண்ணியமே.

* தாயான அம்பிகையும், தந்தையான சிவனும் எல்லா உயிர்களையும் காத்தருளவேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்யுங்கள்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us