Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/குழந்தையாக இருங்கள்!

குழந்தையாக இருங்கள்!

குழந்தையாக இருங்கள்!

குழந்தையாக இருங்கள்!

ADDED : மே 20, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
* வழுக்கு மரத்தில் சறுக்குவது போல, வாழ்விலும் சறுக்குவது இயல்பு. விடாமுயற்சியோடு ஏற முயன்றால் வெற்றியை அடைய முடியும்.

* ஜகன்மாதாவான அம்பிகையை சரணடைந்து விட்டால், நாம் அனைவரும் அவளின் பிள்ளைகள் என்ற அன்புணர்வு உண்டாகி விடும்.

* எல்லோரும் ஏதாவது ஒரு திருப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ராமனுக்கு அணில் உதவி செய்தது போல இயன்ற அளவு தானதர்மம் செய்ய வேண்டும்.

* குழந்தைகள் தெய்வத்திற்குச் சமமானவர்கள். அவர்களிடத்தில் பொறாமை சிறிதும் இருப்பதில்லை.

* 'சிவ' என்ற திருநாமத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜெபியுங்கள். இதை தொடர்ந்து ஜெபிப்பவர்களுக்கு பிறவிப்பிணி தீர்ந்து விடும்.

* குற்றம் புரிபவர்கள் அதிகமாகும்போது, அதற்கேற்ப சிறைச்சாலை, நீதிமன்றம் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். அவர்களை நல்வழியில் திருப்பி விட்டால் குற்றம் குறைந்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us