Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/சிந்தையும் உடலும் ஒன்றாகட்டும் நாம் செய்யும் ஒரு வேலையில்

சிந்தையும் உடலும் ஒன்றாகட்டும் நாம் செய்யும் ஒரு வேலையில்

சிந்தையும் உடலும் ஒன்றாகட்டும் நாம் செய்யும் ஒரு வேலையில்

சிந்தையும் உடலும் ஒன்றாகட்டும் நாம் செய்யும் ஒரு வேலையில்

ADDED : பிப் 03, 2009 04:48 PM


Google News
Latest Tamil News
<P>நம்முடைய மனம் ஈடுபடவில்லை என்றால், நமக்கு சலிப்பும் சோர்வுமே உண்டாகும். உங்களுக்குப் பிடிக்காத ஒரு நபருடன் நல்லவெயிலில் அலைந்து திரிய வேண்டி இருக்கிறது என்றால் உங்கள் மனநிலை நிச்சயம் வருத்தம் கொள்ளும். அதே நேரத்தில் மனதிற்குப் பிடித்தமானவரோடு அலைய வேண்டி இருக்கிறது என்றால் சலிப்போ சோர்வோ நம்மைத் தீண்டுவதில்லை. இரண்டிலும் நடந்தது என்னவோ ஒன்று தான். ஆனால், உற்சாகமும், சலிப்பும் எதனால் உண்டாகின்றன.<BR>*&nbsp;சிந்தனையும், உடலும் ஒன்றினால் அங்கு உற்சாகம் ஊற்றெடுக்கிறது. சிந்தனையும், உடலும் ஈடுபடாத விஷயத்தினால் மனம் சலிப்படைகிறது.<BR>*&nbsp;சிந்தனையையும், உடல் உழைப்பையும் இணைக்கும் பாலமே தியானம். மனம் ஒருமுகப்பட்டுவிட்டால் எந்த வேலையிலும் சுறுசுறுப்பும், திருப்தியும் உண்டாகும். சலிப்பிற்கு அங்கு இடமே இல்லை. இப்படி நாள்தோறும் மனதிற்கென்று ஒரு பயிற்சியாக தியானத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இத்தியானப் பயிற்சியில் கவனம் செலுத்தி, மனஒருமையோடு கடமைகளைச் செய்பவர்கள் நாளடைவில் தங்களின் பணியில் கூடுதல் திறமையும், வளர்ச்சியையும் பெற்றுவிடுவதை உணர்வார்கள். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us