Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/எதிர்கால கவலை வேண்டாம்

எதிர்கால கவலை வேண்டாம்

எதிர்கால கவலை வேண்டாம்

எதிர்கால கவலை வேண்டாம்

ADDED : டிச 11, 2007 09:41 PM


Google News
Latest Tamil News
எல்லாவற்றையுமே உலக நன்மைக்காகக் கொடுப்பவர்கள்தாம் நமது பெரியோர்கள், ஆச்சார்ய புருஷர்கள், தீர்க்கதரிசிகளான ஞானிகள், அவர்கள் எதையுமே தமக்கு என்று வைத்துக் கொண்டதில்லை. அதனால் தான், உலகமே அவர்கள் பின்னால் அடிபணிந்து போய்க் கொண்டிருக்கிறது.

கடவுள் நமக்கு உடலைக் கொடுத்தார். அதில் உள்ளத்தையும் கொடுத்தார். இரண்டுமே நமக்குப் பிறவியில் கிடைத்த சாதனங்கள்தாம். அவற்றை வைத்துக்கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது தான் நம் கையில் இருக்கிறது.

நம்மிடம் உள்ள சக்தி, மோசமான பண்புகளான கோபம், ஆசை, பொறாமை போன்றவற்றால் வடிந்துபோகிறது.

உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது நமது உள்ளத்தில் அரியதோர் சக்தி தூண்டி விடப்படுகிறது. இவை நமது தீய பண்புகளால் வடிந்துபோய்விடும் அபாயம் உண்டு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டால் நமது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

நமது வாழ்க்கையில் மூன்றுவிதமான வடிகால்கள் உள்ளன. 1. கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது. 2. எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கனவு கண்டுகொண்டிருப்பது. 3. நிகழ்காலத்தில் நடப்பதை மிகவும் நிலையானதாக எண்ணி, அதையே கவனித்துக் கொண்டிருப்பது.

நம்முடைய முயற்சியில் அளவுக்கு மீறிய எதிர்கால கவலைகள் இடம் பெறுவது நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.

வாழ்க்கையில் பிடிவாதமாக ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகிவிட்டவர்கள் அதை மாற்றிக் கொள்வது சிரமம்தான். ஏனென்றால், பிடிவாதமான சில பண்புகள் அவர்களிடம் ஊறிப்போய் இருக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us