Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/பணியில் சலிப்பு கூடாது

பணியில் சலிப்பு கூடாது

பணியில் சலிப்பு கூடாது

பணியில் சலிப்பு கூடாது

ADDED : ஜூலை 30, 2008 06:14 PM


Google News
Latest Tamil News
<P>உள்ளம் முழுவதும் அன்புமலர்கள் மலரும் போது, வாழ்க்கையில் அழகும் ஆனந்தமும் புல்வெளியாகப் படர ஆரம்பிக்கின் றன. அப்பசும்புல்வெளியில் தெய்வசக்தியும், மனிதபக்தியும் கைகோர்த்து நடனமிடுவதைக் காணலாம்.<BR>பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் நம்மைத் தூக்கிப் போட்டு அலைக்கழித்து தடுமாற வைத்தாலும், எண்ணத்திலும், செயலிலும் பெருந்தன்மையோடு நடப்பவன் நிச்சயம் பாதுகாக்கப்படுவான்.அன்றாடப் பணியில் சலிப்புடன் ஈடுபடாதீர்கள். எவ்வளவு தூரம் மனமார ஈடுபடுத்திக் கொள்ள முடியும் என்பதை பாருங்கள். ஈடுபாட்டுடன் செய்யும் பணியில் மனநிறைவினைக் காண்பீர்கள்.அன்போடு ஒரு செயலைச் செய்யும் போது பெருமித உணர்வு மேலோங்கும். அப்போது எல்லாரையும் உயர்வாக மதிக்கின்ற பெருந்தன்மையை வளர்த்துக் கொள்ள இயலும்.நீங்கள் செவி கொடுத்துக் கேட்டால் மனிதனின் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, அச்சத்தை வெல்லும் துணிச்சலை, நல்ல எண்ணங்களை, இறைவனே பாராட்டும் அருள்மொழிகளைக் கேட்க முடியும்.<BR>&nbsp;உலகத்தில் நல்ல விஷயங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. வெள்ளமாக எங்கும் பாய்ந்து கொண்டுள்ளன. நம் மனக்கதவைத் திறந்து வைத்தால் நல்ல விஷயங்களை நம்மால் உணரமுடியும்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us