Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சின்மயானந்தர்/பக்தியை மதிப்பிட முடியாது

பக்தியை மதிப்பிட முடியாது

பக்தியை மதிப்பிட முடியாது

பக்தியை மதிப்பிட முடியாது

ADDED : மே 07, 2008 10:50 AM


Google News
Latest Tamil News
<P>* உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் மதம் எனும் உணர்வு கிடையாது. மரத்திற்கோ, நம்முடன் இருக்கும் வீட்டு பிராணிகளுக்கோ மதம் இல்லை. ஏனென்றால், அவற்றுக்குப் பசி, தூக்கம், இனப்பெருக்கம் ஆகிய அடிப்படையான உணர்வுகள் மட்டுமே உள்ளன. மனிதன் அப்படிப்பட்டவனல்ல. மனம் என்ற ஒன்றினைப் பற்றிய சிந்தனை மனித இனத்திற்கு மட்டுமே உண்டு. தனக்குள் இருப்பதை உணர்ந்து கொள்வதன் மூலம் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும். தன்னை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வழிகாட்டுவது தான் மதம். நம்மை நாமே உணர்தல் என்பதே மனித வளர்ச்சிக்கு அடையாளமாகவே மதம் உள்ளது. <BR>* மகான்களும், பக்தர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. ஞானியான ஜனகர் நாடாளும் மன்னனாக விளங்கினார். முதிர்ந்த துறவியான ஜடபாதர் பைத்தியம் போல இருந்தார். சிலர் மவுனியாக இருப்பார்கள். சிலர் புறவுலக உணர்வின்றித் திரிவார்கள். அதனால், நமக்குத் தெரிந்த ஒன்றை வைத்து மட்டுமே பக்தியின் செழுமையை மதிப்பிட முடியாது. பொதுவாக ஞானமார்க்கத்தில் இருப்பவர்களுக்கு கண்களில் ஒளி, பேச்சில் தெளிவு, சுபாவத்தில் பொறுமை, எதையும் ஏற்கும் புன்னகை ஆகியவை இருக்கும். அவர்களது கனிந்த பார்வையும், அருள் நிறைந்த ஆசியும் நம் இதயத்திற்கு ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கும். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us