Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/அமைதியே மேலான மகிழ்ச்சி

அமைதியே மேலான மகிழ்ச்சி

அமைதியே மேலான மகிழ்ச்சி

அமைதியே மேலான மகிழ்ச்சி

ADDED : அக் 31, 2013 11:10 AM


Google News
Latest Tamil News
* எவருடைய மனம் கலங்காமல் இருக்கிறதோ, குழப்பமடையாமல் இருக்கிறதோ, எவர் பாவ, புண்ணியம் பற்றி சிந்திப்பதில்லையோ அவர்களுக்கு அச்சமென்பது அணுவளவும் இருக்காது.

* அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டும். அஞ்ச வேண்டாததற்கு அஞ்சக்கூடாது. இந்த கொள்கையை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல பாதையில் திரும்பிவிட்டீர்கள் என்று பொருள்.

* உடலை அடக்கி, நாக்கை அடக்கி, மனதையும் அடக்கி உள்ள அறிவாளிகளே உண்மையான அடக்கம் உடையவர்கள்.

* அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை.

* ஆசை என்பது கொடிய நஞ்சு போன்றது. இது எவரைப் பிடித்துக் கொள்கிறதோ, அவருக்கு காட்டுப் புல்லைப்போல கஷ்டங்கள் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us