Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/இன்றைய மகிழ்ச்சி முக்கியம்

இன்றைய மகிழ்ச்சி முக்கியம்

இன்றைய மகிழ்ச்சி முக்கியம்

இன்றைய மகிழ்ச்சி முக்கியம்

ADDED : ஆக 24, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
* கடவுள் அனைத்து இடத்திலும் இருக்கிறார். உன் இதயத்தில் எப்போதும் இருக்கிறார். அவரை அங்கே கண்டுகொள்.

* நாளைய எதிர்காலத்தைப் பற்றி எண்ணி கலங்காதீர்கள், நாளையபாடு நாளைக்கு. இன்றைக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருங்கள்.

* கவலைப்படுவதனால் உங்களுக்கு என்ன பலன்? உங்கள் உடல் வளர்ச்சியில் எவனால் ஒரு முழத்தைக் கூட்ட முடியும்? எதை உண்போம்? எதைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனத்திற்கு உரியவை பற்றியும், எதை அணிவோம், எதை அணிந்து உடல் தோற்றத்தை அழகுள்ளதாக்குவோம் என்ற ஆடை அணிகள் பற்றியும் கவலைப்படாதீர்கள். உணவைக் காட்டிலும் உயிரும், உடையைக் காட்டிலும் உடலும் சிறப்பானவை அல்லவா?

* நம்மில் பலர் பணமில்லை, பதவியில்லை என ஆண்டவனிடம் கேட்கிறோம், ஆனால், பரமபிதா தனது குமாரனைப் பிறக்கச் செய்த இடம் ஒரு மாட்டுத்தொழுவம் என்பதை மறந்துவிடுகிறோம்.

- பைபிள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us