Dinamalar-Logo
Dinamalar Logo


மேலானவர்

மேலானவர்

மேலானவர்

ADDED : ஜூலை 12, 2011 10:07 AM


Google News
Latest Tamil News
* உன்மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும் ஆசியையும்

சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தெரிந்து கொள்.

* உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும். நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்; வயல் வெளியிலும் ஆசி பெற்றிடுவாய்.

* ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறு பெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்.

* நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல்

நம்முடைய இன்பத்திற்காக அனைத்தையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

* சகோதர அன்பைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த கடவுளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவர்கள்.

* அனைவருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர்.

- பைபிள்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us