Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!

ADDED : ஜன 19, 2012 10:01 AM


Google News
Latest Tamil News
* ஒருவன் தேவ பக்தியுள்ளவனாய் இருந்து, அவருக்கு சித்தமானதைச் செய்தால் தேவன் அவனுக்கு செவி கொடுப்பார்.

* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும்.

* தர்ம குணமுடையவன் மிருகத்தின் உயிரையும் தன் உயிராகக் கருதுவான். ஆனால், தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும்.

* நீங்கள் எந்த அளவு அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி, கூடுதலாகவும் கொடுக்கப்படும்.

* எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருள்.

* உங்கள் தலைமீது கைவைத்து சத்தியம் செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களால் அதிலிருக்கும் ஒரு ரோமத்தைக்கூட வெள்ளையாகவோ, கறுப்பாகவோ மாற்ற முடியாது.

* ஜெபம் செய்யும் போது கடவுளிடம் எவற்றைக் கேட்டு கொள்வீர்களோ, அவற்றைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.

- பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us