Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/உத்தமராய் இருப்போமா!

உத்தமராய் இருப்போமா!

உத்தமராய் இருப்போமா!

உத்தமராய் இருப்போமா!

ADDED : ஜன 10, 2013 02:01 PM


Google News
Latest Tamil News
* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்துச் சமயத்தில் உதவவே சகோதரன் பிறந்தான்.

* பரமண்டலத்தில் இருக்கிற உங்கள் பிதா, உத்தமராயிருக்கிறது போல, நீங்களும் உத்தமராயிருங்கள்.

* தாழ்ந்த நிலையிலுள்ள சகோதரன் தன் உணர்வை நினைத்து ஆனந்தமடைவானாக.

* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான்.

* நீ உணவு ஆசைக்கு ஆளானவனாயிருந்தால் உன் தொண்டையில் ஒரு கத்தியை வைத்துக் கொள்.

* கொழுத்த எருதுக்கறியைப் பகையோடு உண்பதைவிட, அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.

* மனமானது வேகமுள்ளது தான் ஆனால் உடல் மாமிசமோ பலஹீனமானது.

* என் இருதயம் இறுமாப்பு உள்ளதல்ல. என் கண்கள் மமதை உள்ளவையுமல்ல. எனக்கு எட்டாத விஷயங்களிலோ பெரிய காரியங்களிலோ நான் தலையிடுவதுமில்லை.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us