Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/நேர்மைக்கே என்றும் மதிப்பு

நேர்மைக்கே என்றும் மதிப்பு

நேர்மைக்கே என்றும் மதிப்பு

நேர்மைக்கே என்றும் மதிப்பு

ADDED : பிப் 11, 2013 02:02 PM


Google News
Latest Tamil News
* நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.

* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விடமாட்டான்.

* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.

* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது.

* நையாண்டிக்காரன் அறிவைத் தேடுகிறான். அதைக் கண்டறிவதில்லை. ஆனால், உணர்வுள்ளவனுக்கோ அறிவு வெகுசுலபமாய் வரும்.

* எவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு தன்னைப் பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனுடைய புத்தி வியர்த்தமானது.

* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலை மீது நெருப்புத் தணலைக் குவிப்பவனாவாய்.

- பைபிள் பொன்மொழிகள்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us