Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/குழந்தைகளுக்கு நல்வழி

குழந்தைகளுக்கு நல்வழி

குழந்தைகளுக்கு நல்வழி

குழந்தைகளுக்கு நல்வழி

ADDED : ஏப் 01, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
* அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.

* சாந்த குணமுள்ளவர்களைக் கடவுள் நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.

* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்; நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.

* வீடும், செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ கடவுளிடமிருந்து கிடைப்பது.

* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.

* செயல்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூர்ணமான மனிதனாவான்.

* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.

* அழைக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், தேர்ந்தெடுக்க பட்டவர்களோ சிலர் மட்டுமே.

-பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us